இரண்டு வாரமாக தாக்குப் பிடிக்கும் 'கூலி' | ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு ரிலீஸ் | சிம்பு படத்துக்கு தயாரிப்பாளர் மாற்றமா? | லடாக்கில் சிக்கித் தவிக்கும் மாதவன் | 'கூலி'க்கு 'யுஏ' சான்று கேட்ட வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : விஜயகாந்த் பட தலைப்புக்கு அனுமதி மறுத்த தணிக்கை குழு | பிளாஷ்பேக் : சிவாஜி, பத்மினியை சேர்த்து வைத்த பணம் | என் குழந்தைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா : ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார் | 50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் |
தமிழ் சினிமா வேகமாக வளர்ந்து கொண்டிருந்த காலத்தில் கன்னட சினிமா மெதுவாகவே வளர்ந்தது. கர்நாடகாவை சேர்ந்த ஹொன்னப்ப பாகவதர், ராஜம்மா, பி.ஆர்.பந்துலு உள்ளிட்ட பலர் தமிழில் நடித்துக் கொண்டிருந்தனர்.
1936ம் ஆண்டு வெளியான கன்னடப் படம் 'சம்சார நொகே'. இந்த படத்தின் கதை சினிமா ஆவதற்கு முன்பே நாடகமாக நடத்தப்பட்டது. குறிப்பாக சென்னையில் கன்னடர்கள் அதிகம் வாழ்ந்த பகுதியில் இந்த நாடகம் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்தது. சுமார் 4 ஆயிரம் முறை நடத்தப்பட்ட நாடகம் என்று இதனை குறிப்பிடுவார்கள்.
கன்னடத்தில் இந்த நாடகம், சினிமாவாகி பெரிய வெற்றி பெற்றது. பி.ஆர்.பந்துலு, எம்வி.ராஜம்மா, கிருஷ்ணமூர்த்தி, பத்மாவதி, எம்.எஸ்.மகாதேவ ராவ் உள்ளிட்ட பலர் நடித்தனர். ஹெச்.எல்.என்.சிம்ஹா இயக்கி இருந்தார்.
இந்த நாடகம் சென்னையில் புகழ் பெற்றிருந்ததால் 1948ம் ஆண்டு இந்த படத்தை 33 ஆயிரம் ரூபாய் செலவில் தமிழ் படமாக்கி வெளியிட்டனர். படம் சென்னை அதன் சுற்றுப்புற பகுதியில் மட்டும் வெற்றிகரமாக ஓடி 2லட்சத்து 50 ஆயிரம் வசூலித்தது. இது அப்போது பெரிய வசூல்.