பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் சில படங்களில் நடித்துள்ளார். முதல் முறையாக இயக்குனராக களமிறங்கி இயக்கியுள்ள படம் ‛கிஸ்'. இதில் ஹீரோவாக கவின் நடித்துள்ளார். நாயகியாக பிரீத்தி அஸ்ராணி நடித்துள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைக்கின்றார் .
இதன் படப்பிடிப்பு பல மாதங்களாக நடைபெற்று சமீபத்தில் நிறைவு பெற்றது . முழுக்க முழுக்க காதல் கதையில் இந்த படத்தை இயக்கி உள்ளார் சதீஷ். தற்போது இந்த படத்திலிருந்து முதல் பாடல் வருகின்ற ஏப்ரல் 30ம் தேதி அன்று வெளியாகிறது. தற்போது இந்த பாடலின் புரோமோ வீடியோ வெளியானது. இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.