நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

2002ம் ஆண்டில் 'மௌனம் பேசியதே' என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமான திரிஷா, இப்போது வரை முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். அஜித்துடன் அவர் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' படம் நாளை (ஏப்ரல் 10) திரைக்கு வருகிறது. அந்த வகையில் 23 ஆண்டுகளாக சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார் திரிஷா. மேலும், திரிஷா சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான அதே 2002ம் ஆண்டில் 'காதல் அழிவதில்லை' என்ற படத்தில் அறிமுகமானவர் சார்மி. தெலுங்கில் முன்னணி நடிகையான இவர் சில படங்களை தயாரித்தும் இருக்கிறார்.
திரிஷாவும், சார்மியும் கடந்த 20 ஆண்டுகளாக உயிர்தோழிகளாக இருந்து வருகிறார்கள். சமீபத்தில் இவர்கள் இருவரும் மீண்டும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்களை அவர்கள் தங்களது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார்கள். அதோடு, 20 ஆண்டுகளுக்கு பிறகும் எங்கள் நட்பு வலிமையாக தொடர்ந்து வருகிறது என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்கள்.