23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய சூர்யா | தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் ஹீரோவான சிரஞ்சீவியின் பிறந்தநாள் ஆகஸ்ட் 22ம் தேதி வர உள்ளது. அன்றைய தினம் அவருடைய ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்த சிரஞ்சீவி முடிவு செய்துள்ளதாக டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிரஞ்சீவி தற்போது 'ஆச்சார்யா' படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து மலையாள 'லூசிபர்' படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து நடித்து வருகிறார். இதற்கடுத்து தமிழ் 'வேதாளம்' படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும், மற்றொரு தெலுங்குப் படத்திலும் நடிக்க உள்ளார்.
தனது பிறந்தநாளான ஆகஸ்ட் 22ம் தேதியன்று அதன் தயாரிப்பாளர்களிடம் படம் பற்றிய அப்டேட்டை அளிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளாராம். 'ஆச்சார்யா' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்புடன் புதிய போஸ்டர் வெளியீடு, 'லூசிபர்' தெலுங்கு ரீமேக் படத்தின் டைட்டிலான 'காட்பாதர்' அறிவிப்பு மற்றும் முதல் பார்வை, மற்றும் 'வேதாளம்' தெலுங்கு ரீமேக் மற்றும் அந்த மற்றொரு தெலுங்குப் படம் பற்றிய அறிவிப்புகள் அல்லது போஸ்டர் வெளியீடு ஆகியவை இருக்கும் எனத் தெரிகிறது.
தெலுங்கு மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளதாலும், அதிக தெலுங்குப் படங்கள் வெளியாகும் கர்நாடகா மாநிலத்திலும் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளதாலும் தெலுங்குத் திரையுலகினரும், ரசிகர்களும் ஓரளவிற்கு மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். சிரஞ்சீவி படத்தின் நான்கு அப்டேட்கள் வர உள்ளது தெலுங்குத் திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியாக உள்ளதாம்.