நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம் 'கூலி'. இப்படத்தின் உலகம் முழுவதிலுமான அதிகாரப்பூர்வ வசூல் 404 கோடி என்று அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு வேறு எந்த வசூல் அறிவிப்பும் இதுவரையில் வெளியாகவில்லை.
இருந்தாலும் படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்கிய வினியோக நிறுவனம் வெளிநாட்டு வசூல் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். வெளிநாடுகளில் 20 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்துள்ளதாம். இந்திய ரூபாய் மதிப்பில் 167 கோடி. படத்தின் வெளிநாட்டு உரிமை சுமார் 85 கோடிக்கு விற்கப்பட்டதாகத் தகவல். அதை விட இரண்டு மடங்கு வசூல் செய்துள்ளதால் வெளிநாடுகளில் இப்படத்திற்குக் குறிப்பிடத்தக்க லாபம் கிடைத்திருக்கும்.
இந்திய வசூல், வெளிநாட்டு வசூல் என படம் 500 கோடி வசூலைக் கடந்துவிட்டது. இருந்தாலும் ஒட்டு மொத்த அதிகாரப்பூர்வ வசூலை அறிவிக்காமல் உள்ளார்கள்.