நடிக்க வைப்பதை விட நடிப்பது கடினம் : பாலாஜி சக்திவேல் | பிளாஷ்பேக் : தமிழ் மக்களை டிஸ்கோ பைத்தியம் பிடிக்க வைத்த படம் | பிளாஷ்பேக் : நல்லதங்காள் போன்று பெண்களை கதற வைத்த 'பெண் மனம்' | நிஜ சிங்கத்துடன் நடித்த ஷ்ரிதா ராவ் | மோகன்லால், பஹத் பாசிலை பின்னுக்குத் தள்ளிய கல்யாணி பிரியதர்ஷன் | 2025 : 8 மாதங்களில் 175 படங்கள் ரிலீஸ்... அதிர்ச்சி தரும் ரிசல்ட் | அனுஷ்கா வராதது அவர் விருப்பம் : இயக்குனர் கிரிஷ் பதில் | தெலுங்கு சினிமாவில் 1000 கோடி வசூல் : காரணம் சொல்லும் சிவகார்த்திகேயன் | அஜித், ஆதிக் இணையும் படம் : இந்த மாதம் அறிவிப்பு? | மீண்டும் இணைந்த எஸ்.எம்.எஸ் கூட்டணி : சரி, படத்துல சந்தானம் இருக்கிறாரா? |
காதல், வழக்கு எண், கல்லூரி உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் பாலாஜி சக்திவேல், அவர் இயக்கி முடித்துள்ள ரா..ராஜ்குமார் படம் வெளிவரவில்லை. இதற்கிடையில் அவர் தற்போது முழுநேர நடிகராகி விட்டார். சமீபத்தில் வெளியான டிஎன்ஏ, குடும்பஸ்தன், பறந்து போ படங்களில் அவர் நடிப்பு பேசப்பட்டது. தற்போது வெளியாக இருக்கும் 'காந்தி கண்ணாடி' படத்தில் அவர் தேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனா ஜோடியாக நடித்திருக்கிறார். படம் வருகிற 5ம் தேதி வெளிவருகிறது.
இந்த படம் குறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் பல வருடங்கள் இயக்குநராக இருந்து வந்திருக்கிறேன். நடிகர்களின் மூலம் கதாபாத்திரங்கள் உயிர்ப்பெடுப்பதைப் பார்ப்பது எனக்கு எப்போதும் மகிழ்ச்சி. ஆனால், மறுபுறம் நிற்கும் நடிகராக இருப்பது சுலபமல்ல என்பதைக் கற்றுக் கொண்டேன். அதாவது நடிக்க வைப்பதை விட நடிப்பது கடினமானது.
நான் இணைந்த ஒவ்வொரு திட்டமும் சிறந்த இயக்குநர்களின் படைப்பாக இருந்தது. அதுபோலவே 'காந்தி கண்ணாடி'யை ஷெரீப் விவரித்தவுடன் உடனே சம்மதித்தேன். மிகவும் அழகான, உணர்ச்சிமிகு திரைக்கதை அது. இறுதிப் படத்தைப் பார்த்தபோது அவர் எவ்வளவு நன்றாக உருவாக்கியிருக்கிறார் என்பதில் மகிழ்ச்சி.
இந்த படத்தில் கே.பி.ஒய் பாலா நிச்சயமாக கோலிவுட்டின் 'கண்டெண்ட் டிரிவன் ஸ்டார்' ஆகப் போகிறார். அர்ச்சனா ஒரு அபாரமான திறமைசாலி, அவருடன் திரை பகிர்ந்தது பெருமையாக இருந்தது. காந்தி கண்ணாடி பார்வையாளர்களுக்கு அற்புதமான அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன். என்றார்.