பிளாஷ்பேக் : தமிழ் மக்களை டிஸ்கோ பைத்தியம் பிடிக்க வைத்த படம் | பிளாஷ்பேக் : நல்லதங்காள் போன்று பெண்களை கதற வைத்த 'பெண் மனம்' | நிஜ சிங்கத்துடன் நடித்த ஷ்ரிதா ராவ் | மோகன்லால், பகத் பாசிலை பின்னுக்குத் தள்ளி கல்யாணி பிரியதர்ஷன் | 2025 : 8 மாதங்களில் 175 படங்கள் ரிலீஸ்... அதிர்ச்சி தரும் ரிசல்ட் | அனுஷ்கா வராதது அவர் விருப்பம் : இயக்குனர் கிரிஷ் பதில் | தெலுங்கு சினிமாவில் 1000 கோடி வசூல் : காரணம் சொல்லும் சிவகார்த்திகேயன் | அஜித், ஆதிக் இணையும் படம் : இந்த மாதம் அறிவிப்பு? | மீண்டும் இணைந்த எஸ்.எம்.எஸ் கூட்டணி : சரி, படத்துல சந்தானம் இருக்கிறாரா? | மலையாளத்தில் கல்யாணிக்கு நடந்தது : திரிஷா, நயன்தாராவுக்கு நடக்கலை |
ஹிந்தியில் பிரமாதமான வெற்றி பெற்ற படம் 'டிஸ்கோ டான்சர்'. டிஸ்கோ என்பது பிரஞ்சு நாட்டின் இரவு கிளப்புகளில் ஆடும் ஒரு நடனம் மற்றும் இசைக்கப்படும் ஒரு இசை. இந்த நடனத்தையும், இசையையும் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் நோக்கத்தில்தான் 'டிஸ்கோ டான்சர்' படம் உருவாக்கப்பட்டது. மிதுன் சக்ரவர்த்தி டிஸ்கோ நடன பயிற்சி பெற்றார். பப்பி லஹரி டிஸ்கோ இசையை கொண்டு வந்தார். படம் சூப்பர் ஹிட்டானது.
இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய முயன்றபோது மிதுன் சக்ரவர்த்தி அளவிற்கு ஆடுகிற ஹீரோ இல்லை. கமல்ஹாசன் இருந்தார் ஆனால் அவருக்கு டிஸ்கோ நடனத்தில பயிற்சி இல்லை. அப்போது கல்லூரி மேடைகளில் ஆடிக் கொண்டிருந்த நாகேஷ் மகன் ஆனத்பாபுவை கண்டுபிடித்து நடிக்க வைத்தனர். படத்திற்கு 'பாடும் வானம்பாடி' என்று தலைப்பு வைத்தனர். உண்மையில் மிதுன் சக்ரவர்தியை விட பிரமாதமாக ஆடி தமிழ் சினிமாவில் நடிகராக தடம் பதித்தார் ஆனந்த் பாபு.
இந்த படம் வெளிவந்த பிறகு தமிழ்நாடு முழுக்க டிஸ்கோ பைத்தியம் பிடித்தது. 'நான் ஒரு டிஸ்கோ டான்சர்' பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. வளையல் கடைகளில் டிஸ்கோ வளையல், டிஸ்கோ பொட்டு, டிஸ்கோ ரிப்பன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள். ஆண்கள் டிஸ்கோ கட்டிங் செய்து வித்தியாசமான சிகை அலங்காரத்துடன் வலம் வந்தார்கள். . டிஸ்கோ சாந்தி என்கிற பெயரில் நடிகையையும் வந்து சேர்ந்தார்.