பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் | கரூர் சம்பவம்: காந்தாரா நிகழ்ச்சி ரத்து | சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் தரும் தனுஷ்: அருண் விஜய் புகழாரம் | 7 வருடங்களுக்கு பிறகு கதை நாயகியாக நடிக்கும் ஆஸ்னா |
பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது சகோதரர் எல்வின் இணைந்து நடிக்கும் படம் புல்லட். அமானுஷ்ய ஆக்ஷன் திரில்லர் ஜானரில் உருவாகும் இந்த பட டீசரை விஷால், எஸ்.ஜே சூர்யா, பிருத்விராஜ், ஜிவி பிரகாஷ் வெளியிட்டனர்.
இந்த படத்தில் மந்திரவாதி மாதிரியான மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ளார் முன்னாள் கவர்ச்சி நடிகையான டிஸ்கோ சாந்தி. பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை திருமணம் செய்து ஐதராபாத்தில் செட்டில் ஆனவர். பல ஆண்டுகளாக நடிக்காமல் இருந்தவர், 28 ஆண்டுகளுக்குப் புல்லட்டில் நடித்து இருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் புல்லட் படம் ரிலீஸ் ஆக உள்ளது சாம் சி.எஸ். இசையமைக்க, 'டிமான்டி காலனி', 'டைரி' உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் ஒளிப்பதிவை கையாண்டுள்ளார். அருள்நிதி நடித்த டைரி படத்தை இயக்கியவர் இன்னாசி பாண்டியன்.
மறைந்த பிரபல ஹீரோ ஆனந்தன் மகள் தான் டிஸ்கோ சாந்தி. இவரின் சகோதரிதான் பிரகாஷ்ராஜ் முன்னாள் மனைவியான லலிதாகுமாரி. டிஸ்கோ சாந்தி கணவரான நடிகர் ஸ்ரீஹரி 2013ல் காலமானார். 1997க்குபின் டிஸ்கோசாந்தி நடிக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.