எனக்கு தடை விதிப்பவர்களிடம் ஏன் என்று கேளுங்கள்: ராஷ்மிகா | அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பூமி பட்னேகர் | பிளாஷ்பேக் : அமிதாப்பச்சன் பட ரீமேக்கில் ஆர்வம் காட்டிய ரஜினி | பழம்பெரும் பாடகி, நடிகை பாலசரஸ்வதி தேவி காலமானார் | நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் |
'பாகுபலி' படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான அனுஷ்கா அதன்பின் 'பாகமதி, நிசப்தம், மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்' ஆகிய படங்களில் நடித்தார். கடந்த 8 வருடங்களில் அவர் நடித்தது மூன்றே மூன்று படங்கள்தான். இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்த 'காட்டி' படம் இந்த வாரம் வெளியாக உள்ளது.
ஆனால், இந்தப் படத்தின் புரமோஷனுக்காக அவர் எந்த காரணத்திற்காகவோ வெளியில் வரவில்லை. படத்தின் இயக்குனர் கிரிஷ் அது குறித்து பேசுகையில், 'அது அனுஷ்காவின் விருப்பம்' என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
இதனிடையே, தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட குட்டி அனுஷ்கா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அனுஷ்கா. அதோடு, “மீண்டும் மீண்டும் நீங்கள் அனைவரும் என் முகத்தில் புன்னகையை வரவழைக்கத் தவறுவதில்லை, எப்போதும் அன்பையும் ஆதரவையும் அளித்ததற்கு மிகவும் நன்றி.. மற்றும் எங்கள் சிறிய ஷீலாவதியின் இந்த அழகான பதிப்பிற்கு நன்றி…,” என்று பதிவிட்டுள்ளார்.
'காட்டி' படத்தில் ஷீலாவதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அனுஷ்கா.