பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கிர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ஆனந்த்ராஜ், ராஜ்கிரண், கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வா வாத்தியார்'. எம்.ஜி.ஆர் ரசிகராக கார்த்தி நடித்துள்ள இந்த படம் ஒரு பேண்டஸி கதை களத்தில் உருவாகியுள்ளது. இதில் காவல்துறை அதிகாரியாக இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரன் என்ற வேடத்தில் நடித்திருக்கிறார் கார்த்தி. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு 160 நாட்கள் நடைபெற்றது . இதற்கிடையில் இந்த படத்திற்கு பண சிக்கல் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தனர். சமீபத்தில் பிரச்னைகள் முடிவடைந்தது மீதமுள்ள படப்பிடிப்பை விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளனர். தற்போது இந்த படத்தை இவ்வருட டிசம்பர் மாதத்தில் திரைக்கு கொண்டு வருவதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதில் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனம் கைபற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இதனால் இந்த முறை உறுதியாக திரைக்கு வரும் என்கிறார்கள்.