பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
தெரு நாய் தொடர்பான பிரச்னை இந்திய அளவில் எதிரொலிக்கிறது. இதை வைத்து தமிழில் தனியார் டிவியில் ஒளிபரப்பாகும் ‛நீயா நானா' நிகழ்ச்சியில் சிறப்பு விவாதம் நடந்தது. நாயை ஆதரித்து பேசுபவர்கள், அதற்கு எதிரானவர்கள் என களமிறங்கி பேசினார். இந்த நிகழ்ச்சி நேற்று ஞாயிறு அன்று ஒளிப்பரப்பானது. இந்த நிகழ்ச்சி டிரெண்ட் ஆகி உள்ளது. வலைதளங்களில் இதைப்பற்றி நிறைய பேர் தங்களது ஆதரவு மற்றும் எதிர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நாய்களுக்கு ஆதரவாக பேசிய நடிகர் படவா கோபி மற்றும் நடிகை அம்மு ஆகியோரின் பேச்சு கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. பலரும் அவர்களை டிரோல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் படவா கோபி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ‛‛மனிதர்கள் மீதான அன்பிலும், நாய்கள் மீதான அன்பிலும் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நோக்கத்தில் தான் என் வீட்டு கல்யாண வேலைக்கு மத்தியிலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றேன். ஆனால், நான் நினைத்தது வேறு, அங்கு நடந்தது வேறு. நாய்க் கடியால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து எனக்கு தெரியாது. என் கருத்தை முழுமையாக நிகழ்ச்சியில் தெரிவிக்கவே விடவில்லை. நீங்கள் எல்லோரும் பார்த்தது எடிட் செய்யப்பட்ட எபிசோடு. அப்படி போடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. முடிந்தால் அந்த நிகழ்ச்சியின் எடிட் செய்யப்படாத வீடியோவை போடச் சொல்லுங்கள் அப்போது நான் பேசியது புரியும். பொது மக்கள் யாரும் என்னை தவறாக நினைத்துவிடாதீர்கள். நான் பேசியது யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல. என்னுடைய கருத்துகள் அப்படி புரிந்து கொள்ளப்பட்டிருந்தால் அதற்கு நான் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்''.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய படவா கோபி, ‛‛இரவு 9 மணிக்கு மேல் வெளியே செல்லாதீர்கள், நாய் குறைக்கும்'' என கூறியிருந்தார். இதை வைத்து அவரை நிறைய பேர் டிரோல் செய்தனர். இந்தச்சூழலில் தான் அவர் வீடியோ வெளியிட்டு விளக்கத்துடன் மன்னிப்பும் கேட்டுள்ளார்.