பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! | தனுசை ஆச்சரியப்பட வைத்த இயக்குனர் விக்னேஷ் ராஜா! | 96 பட இயக்குனரிடம் கதை கேட்ட நானி | லிங்குசாமி, சரண் புதிய படத்திற்காக கூட்டணி | இதெல்லாம் டிசம்பர் மாதம் ரிலீஸ் : ரிசல்ட் எப்படி இருக்குமோ? | சின்மயி மன்னிப்பு : இயக்குனர் பேரரசு பதிலடி |

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக நடித்தவர் அர்ச்சனா. அதே போல் பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோவாக நடித்தவர் அருண் பிரசாத். இவர்கள் இருவருமே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர்கள். குறிப்பாக ,அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சி 7-வது சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்து டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அதேபோல் அருண் பிரசாத் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். இந்த 8வது சீசனின்போது பிக்பாஸ் வீட்டுக்குள் அருண் பிரசாத்தின் உறவினராக சென்றார் அர்ச்சனா. அப்போது அவர்கள் தங்களை காதலை அறிவித்தார்கள். இந்நிலையில் தற்போது தங்களது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருப்பதாக இணைய பக்கத்தில் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார் அருண் பிரசாத். என்றாலும் திருமணம் எப்போது நடைபெறும் என்பதை அவர் குறிப்பிடவில்லை.




