100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி |
தலைப்பைப் போலவே இனி தினமும் பிகினி புகைப்படங்களைப் பற்றி ஒரு செய்தியைப் போடுமளவிற்கு நமக்கு சிலர் அப்டேட் கொடுத்து விடுகிறார்கள். அந்த விதத்தில் இன்றைய பிகினி அப்டேட் நடிகை ஆண்ட்ரியா. பொதுவாக பிகினி புகைப்படங்களை பாலிவுட் நடிகைகள் தான் அதிகம் பதிவிடுவார்கள். நேற்று கூட நடிகை காஜல் அகர்வால் ஒரு தத்துவத்துடன் பிகினி புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.
தமிழகத்தைச் சேர்ந்த நடிகைகள் பிகினி புகைப்படங்களைப் பதிவிடுவது அபூர்வமாகத்தான் நடக்கும். சில தினங்களக்கு முன்பு நடிகை கீர்த்தி பாண்டியன் பிகினி புகைப்படங்களைப் பகிர்ந்து, அது ஏன் என்பதற்கான நீண்ட விளக்கம் ஒன்றைக் கொடுத்திருந்தார்.
இன்று நடிகை ஆண்ட்ரியா மாலத்தீவின் அழகிய கடற்கரை ஒன்றில் படுத்துக் கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். பக்கத்தில் ஒரு ஒயின் கிளாஸ் உள்ளது. அடுத்து ஒரு வீடியோவில் ஒயின் பாட்டிலில் இருந்து ஒயின் கிளாஸில் ஒயின் விழுவதையும், அதை கடல் தண்ணீர் அலையுடன் வந்து அடிப்பதையும் பதிவிட்டுள்ளார். பிகினியுடன் கடற்கரையில் ஓடும் ஒரு மங்கலான வீடியோவையும் இணைத்துள்ளார்.
இதையெல்லாம் ஹாலிவுட்டில் கவர்ச்சி, ஆபாசம் என்றெல்லாம் சொல்லமாட்டார்கள், 'எரேட்டிக்' என்று சொல்லி முடித்துவிடுவார்கள்.