சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து புதிய படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்களில் தனுஷும் ஒருவர். அவருடைய 43வது படமான 'மாறன்' படத்தில் நடித்து முடித்த தனுஷ் அடுத்து 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்து வருகிறார். அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள 'நானே வருவேன்' படத்தின் படப்பிடிப்பு நாளை ஆகஸ்ட் 20 முதல் ஆரம்பமாகும் என ஜுன் மாதமே அறிவித்தார்கள்.
'திருச்சிற்றம்பலம்', தெலுங்கு இயக்குனர்கள் சேகர் கம்முலா இயக்க உள்ள படம், வெங்கி அட்லுரி இயக்க உள்ள படம் என தனுஷ் அடுத்தடுத்து புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமானதால் எந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும், எந்தப் படம் முதலில் வரும் என்ற குழப்பம் நிலவியது.
அந்த சமயத்தில் தான், 'திருச்சிற்றம்பலம்' பட அறிவிப்பு வருவதற்கு முன்னதாகவே 'நானே வருவேன்' படத்தின் படப்பிடிப்பை அறிவித்தார்கள். இப்போது 'நானே வருவேன்' படப்பிடிப்பு அடுத்த மாதத்திற்கு தள்ளி வைத்துவிட்டார்களாம். இதனால், தனுஷ் நடித்து அடுத்து 'மாறன்', 'திருச்சிற்றம்பலம்' ஆகிய படங்கள் வெளிவந்த பிறகே மற்ற படங்கள் வரும் எனத் தெரிகிறது.