'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி |
மலையாளத்தில் நடிகையாக அறிமுகமான ஷகிலா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது சின்னத்திரை நிகழ்ச்சியில் மற்றும் ஒரு சில படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் ஷகிலாவின் உடல் நலம் குறித்து தவறான செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியானதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ஷகிலா வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில், தன்னைப்பற்றி வெளியான ஒரு செய்தி முற்றிலும் வதந்தி. நான் தற்போது மகிழ்ச்சியாகவும் நல்ல உடல் நலத்துடன் இருக்கின்றேன். அந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். மேலும் என்னைப் பற்றிய வதந்தி பரவிய உடன் ஏராளமானோர் தனக்கு போன் செய்து நலம் விசாரித்த அனைவருக்கும் தனது நன்றி. குறிப்பாக இந்த அன்பை தெரிந்து கொள்ள வைத்த வதந்தியை பரப்பியவர்களுக்கும் தனது நன்றி' என்று கூறியுள்ளார்.
ஷகிலாவின் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.