அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

நடிகர் வேணு அரவிந்த் கோமாவில் இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், சக சின்னத்திரை நடிகர் அவர் கோமாவில் இல்லை, அவரது உடல் நலம் முன்னேறி வருகிறது என வீடியோ வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்த மூளை அறுவை சிகிச்சைக்கு பின், நடிகர் வேணு அரவிந்த் கோமாவுக்கு சென்று விட்டதாக செய்திகள் வெளியாயின. இதை உறுதி செய்யும் வகையில், நடிகர் சங்கமும் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த செய்தியை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், சின்னத்திரையில் வேணு அரவிந்துடன் இணைந்து நடித்த சக நடிகரான அருண் ராஜன், வேணு அரவிந்த் கோமாவில் இல்லை என வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் "வேணு அரவிந்த் கோமாவில் இல்லை. தற்போது நினைவுடன் தான் இருக்கிறார். தனக்கு செய்யப்படும் சிகிச்சை குறித்து அவர் கேட்டறிந்து வருகிறார். சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார்.
நான் சில நிமிடங்களுக்கு முன்பு தான் வேணு சார் மனைவி ஷோபாவிடம் பேசினேன். தற்போது அவர் நலமாக இருக்கிறார். தயவுசெய்து வேணு கோமாவில் இருப்பது போன்ற தவறான செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம். அவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்". என அருண் ராஜன் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.