திருமணமெல்லாம் எனக்கு செட் ஆகாது - ஷகிலா பளீச் | விஜய் படத்தில் இணைந்த ‛விருமாண்டி' அபிராமி | விடாமுயற்சி டிரைலர் வெளியானது ; ஆக்ஷனில் அதகளம் பண்ணும் அஜித் : பிப்., 6ல் படம் ரிலீஸ் | ஹாலிவுட் வெப் தொடரில் நடிக்கும் திஷா பதானி | பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ | சைந்தவி உடன் இணைந்து பணியாற்றுவது ஏன்? - ஜி.வி.பிரகாஷ் சொன்ன பதில் | இரும்புக்கை மாயாவி படத்தில் நடிக்கும் அமீர்கான்? | விஜய்க்கு சொன்ன மூன்று கதை : மகிழ் திருமேனி | சூப்பர் ஹீரோ கதையில் சூர்யா | ஸ்ருதிஹாசன் குரலில் வெளிவந்த டிரெயின் முன்னோட்டம் |
மலையாளம் மட்டும் தமிழ் சினிமாவில் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட்க்கு இடம் கொடுப்பதாலும் தான் பாலியல் தவறுகள் நடக்கின்றன. அட்ஜஸ்ட்மென்ட்க்கு முதலில் விரும்பி சம்மதிக்கும் நடிகைகள் பின்னர் குற்றம் சாட்டுகிறார்கள் என்று கவர்ச்சி நடிகை ஷகிலா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: மலையாள சினிமாவில் இருப்பது போல தமிழிலும் இந்த பாலியல் தொல்லை பிரச்னை உள்ளது. குறிப்பாக தெலுங்கில் அதிகமாகவே உள்ளது. ஆனால் ஹிந்தியை பொறுத்தவரை, அப்படி அல்ல. அவர்கள் எடுத்த உடனேயே நண்பர்களாக மாறிவிடுவார்கள். எனவே அங்கு பெரிதாக காஸ்டிங் கவுச் பிரச்னை இருக்காது. ஆனால் அங்கு நெப்போடிஸம் பிரச்னை உள்ளது. அதாவது புதிய நடிகர்களை யாரையும் வளர விடாமல், தங்களின் வாரிசுகளையே முன்னணி நடிகர்களாக முயற்சிப்பது போன்ற பிரச்னை உள்ளது.
தென்னிந்திய சினிமாவில் ஆரம்பத்திலேயே தயாரிப்பாளருக்கும், தனக்கும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என நடிகையின் மேனேஜரிடம் இயக்குனர்கள் பேசி விடுவார்கள். இதற்கு ஒப்புக்கொண்டு தான் அந்த நடிகை படத்தில் நடிப்பார். அதனால் நடிகைக்கும் இதில் பங்கு இருக்கிறது. முக்கால்வாசி படம் முடிந்த பின்னர் அவர்களால் தன்னை படத்தில் இருந்து வெளியேற்றமுடியாது என்பதால் நடிகைகள் ஒத்துழைக்க மறுப்பார்கள். இதன் காரணமாக தான் பல பிரச்னைகள் வருகிறது.
மேலும் சிலர் வாய்ப்பு தருவதாக சொல்லி, நடிகையை அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு அழைப்பார்கள். நடிகையும் ஒப்புக் கொண்டுதான் போவார். வாய்ப்பு கொடுத்து விட்டால் எந்த பிரச்சனையும் இல்லை. வாய்ப்பு தராத போது தான் இதனை நடிகைகள் பிரச்னையாக்குகிறார்கள். என்கிறார் ஷகிலா.