டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் |

ஶ்ரீ லக்ஷ்மி சண்முகநாதம் பிலிம்ஸ் மற்றும் கேசவ் புரொடக்ஷன்ஸ் சார்பில் மணிகண்டன் மற்றும் மகேஸ்வரன்கேசவன் இணைந்து தயாரிக்கும் படம் 'போர் சிக்னல்'. தயாரிப்பாளர்களில் ஒருவரான மகேஸ்வரன் கேசவன் இயக்குகிறார். 'விஜய் டிவி' புகழ் கதையின் நாயகனாக நடிக்கிறார். அவருடன், அருவி திருநாவுக்கரசு, கல்லூரி வினோத், லொள்ளு சபா சேஷு, ஷர்மிளா, விஜய் ஆதிராஜ், யூடியூபர் காத்து கருப்பு கலை உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அலி மிர்சா இசை அமைக்கிறார். பழனியப்பன் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் மகேஸ்வரன் கேசவன் கூறியதாவது : காதலும், உணர்வுகளும் கலந்த கலகலப்பான படமாக உருவாகிறது. நகரங்களில் வசிக்கும் வெகு ஜனங்கள் வெகுவாக பயன்படுத்தும் எளிய போக்குவரத்தான ஷேர் ஆட்டோவை சுற்றி இந்த கதை சுழல்கிறது. சென்னையின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு தினமும் ஷேர் ஆட்டோவில் செல்லும் பயணிகளுக்கும் அதன் ஓட்டுநருக்கும் இடையில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பாக உருவாகியுள்ளது. மனிதர்களின் அந்தரங்க உணர்வுகளையும் யதார்த்தங்களையும் உள்ளடக்கிய ரொமான்ஸ் டிராமாவாக உருவாகியுள்ளது. என்றார்.