பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மாஸ்டர் மகேந்திரன், அதன் பிறகு ஹீரோவாக சில படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் பெரிதாக பேசப்படவில்லை. ஹீரோவாக ஜெயிக்க தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தவருக்கு சமீபத்தில் வெளியான மாஸ்டர் படம் பெரிய திருப்புமுனையை கொடுத்தது. அதில் அவர் விஜய்சேதுபதி நடித்த பவானி கேரக்டரின் இளம் பகுதியில் நடித்திருந்தார்.
இதை தொடர்ந்து மகேந்திரனுக்கு வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளது. சில படங்களில் வில்லனாகவும், சிலவற்றில் ஹீரோவாகவும் நடிக்கிறார். அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களில் ஒன்று அமிகோ கேரேஜ். இது கேங்கஸ்டர் கதையை கொண்டது. ஆதிரா என்ற புதுமுகம் மகேந்திரன் ஜோடியாக நடிக்கிறார்.
அறிமுக இயக்குனரான பிரசாந்த் நாகராஜன் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: ஒரு கேரேஜை சுற்றியே படத்தின் கதை அமைந்துள்ளதால் படத்திற்கு இந்த பெயரை வைத்தோம். இது கேங்ஸ்டர் கதை களத்தில் உருவாகும் த்ரில்லர் படம். கேங்ஸ்டர் என்றாலே மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட இமேஜ் உள்ளது. ஆனால் அவர்களின் வாழ்க்கையிலும் பலவிதமான எமோஷன்கள் இருக்கும். ஆரம்பத்தில் அவர்களும் சாதாரண வாழ்க்கையை தான் வாழ்ந்திருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை சொல்வது தான் இந்த கதை என்றார்.