போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி | தேங்கி கிடந்த 'சுமோ' ஏப்., 25ம் தேதி திரைக்கு வருகிறார் | பெல்ஜியம் கார் ரேஸ் : இரண்டாம் இடம் பிடித்த அஜித் அணி | சிவாஜி வீடு பிரபுவிற்கு சொந்தம் : வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவு ரத்து |
ரஜினி தன் நண்பர்களுக்கு உதவுவதற்காக அவ்வப்போது படம் நடித்து கொடுப்பார். அந்த வரிசையில் ஆரம்ப காலங்களில் தன்னோடு இணைந்து பயணித்த விஜயகுமாருக்கு ஒரு படம் நடித்து கொடுக்க விரும்பினார். அந்த படத்தை மகேந்திரன் இயக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஆனால் அந்த நேரத்தில் ரஜினிக்கான கதை எதுவும் மகேந்திரனிடம் இல்லை. இந்த நேரத்தில் பிரபல கன்னட இயக்குனர் புட்டண்ணா இயக்கிய 'கதா சங்கமா' என்ற படத்தை பார்த்தார். இந்த படம் மூன்று கதைகளை கொண்ட அந்தாலஜி படம். 3 எழுத்தாளர்களின் மூன்று கதைகள் இடம் பெற்று இருந்தன. மூன்று கதைகளிலும் வெவ்வேறு நடிகர் - நடிகைகள் நடித்திருந்தனர். மூன்றாவது கதையின் பெயர் 'முனிதாயி.' இந்த கதையை மட்டும் தனி படமாக இயக்க மகேந்திரன் முடிவு செய்தார். 'முனிதாயி' கதையில் ரஜினி வில்லனாக நடித்திருந்ததும் அதற்கு ஒரு காரணம்.
முனிதாயி கதை தமிழில் 'கை கொடுக்கும் கை' என்ற பெயரில் தயாரானது. கன்னடத்தில் வில்லனாக நடித்த ரஜினி இதில் நாயகனாக நடித்தார். இந்த படத்தின் கதைப்படி பார்வையற்ற பெண்ணான ரேவதியை, ரஜினி மனமுவந்து திருமணம் செய்து கொள்வார். அவரை பூவை போல பார்த்துக் கொள்வார், 'ஒரு பெண்கூட எனது உடலை பார்க்க கூடாது' என்ற எண்ணம் கொண்ட ரேவதியை ஊர் பண்ணையார் பாலியல் பலாத்காரம் செய்து விடுகிறார். பண்ணையாரை ரஜினி அடித்து துவைத்துவிடுவார். இருப்பினும் இறுதியில் அவரை உயிருடன் விட்டுவிட்டு ரேவதிக்கு பக்குவமாக எடுத்துக் சொல்லி அந்த ஊரை விட்டு செல்வதாக படத்தின் கதை அமைந்தது.
இந்த கிளைமாக்ஸ் தயாரிப்பாளர் விஜயகுமாருக்கு பிடிக்கவில்லை. ரஜினி மனைவியை ஒருவன் கெடுத்த பிறகு அவர் மனைவிக்கு அறிவுரை சொல்வதை ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள். கெடுத்தவனை ரஜினி போட்டுத் தள்ளணும் அதைத்தான் ரசிகர்கள் ஏற்பார்கள் என்று மகேந்திரனிடம் சொன்னார். ஆனால் அவர் அதை ஏற்கவில்லை.
ரஜினியும் கிளைமாக்ஸை மாற்றுங்கள் என்று மகேந்திரனிடம் சொன்னார். ஆனால் அவரோ மூலக் கதையில் என்ன இருக்கிறதோ அதைத்தான் படத்தில் வைப்பேன். மாற்றினால் அது மூலக் கதைக்கு செய்யும் துரோகம் என்று மாற்ற மறுத்து விட்டார். அப்படி மாற்றினால் இயக்குனர் என்று எனது பெயரை படத்தில் போடக்கூடாது என்று கூறிவிட்டார். ரஜினியும் ஒப்புக் கொண்டார்.
படம் வெளிவந்தது, ரஜினி ரசிகர்களுக்கு படம் பிடிக்கவில்லை. மகேந்திரனை திட்டி தீர்த்தார்கள். ஆனால் விமர்சன வெளியில் படம் பாராட்டுகளை குவித்தது. படம் ஒரு சில தியேட்டர்களில் 100 நாள் ஓடினாலும், வசூல் ரீதியாக பெரிய கலெக்ஷனை தரவில்லை.