விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
விஜய் நடித்த 'தமிழன்' படத்தை இயக்கிய மஜீத், நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கும் புதிய படம் 'கரம் மசாலா'. இதில் விமல், நாயகனாக நடித்துள்ளார். சாம்பிகா டயானா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், சாம்ஸ், நமோ நாராயண், ஞானசம்பந்தம் ஆகியோர் நடித்துள்ளனர். கே.கோகுல் ஒளிப்பதிவு செய்கிறார், பைஜூ ஜேக்கப் இசை அமைக்கிறார்.
படம் குறித்து இயக்குனர் மஜீத் கூறும்போது "இந்த நவீன உலகத்தில் எல்லாமே புரோக்கர் வழியாக என்றாகிவிட்டது. பல வகையான புரோக்கர்களின் வழியாகவே நம் அன்றாட வாழ்க்கை நடக்கிறது. உதாராணமாக வீடு, திருமணம், தொழில் அனைத்தும் அவர்களின் பங்கு உள்ளது. அந்த புரோக்கர்களால் நிகழும் நல்லதும் கெட்டதும் கலந்த சம்பவங்களை, முழுக்க முழுக்க சிரித்து மகிழும் படமாகி உள்ளது.
படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து குடும்ப உறுப்பினர்களும் கொண்டாடும் வகையிலான கலக்கலான கமர்ஷியல் காமெடிப் படமாக இப்படம் இருக்கும். கோடைகால விடுமுறை படமாக வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்'' என்றார்.