கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி | தேங்கி கிடந்த 'சுமோ' ஏப்., 25ம் தேதி திரைக்கு வருகிறார் | பெல்ஜியம் கார் ரேஸ் : இரண்டாம் இடம் பிடித்த அஜித் அணி | சிவாஜி வீடு பிரபுவிற்கு சொந்தம் : வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவு ரத்து | பிளாஷ்பேக்: மேடை நாடகம், வெள்ளித்திரை இரண்டிலும் முத்திரை பதித்த “வியட்நாம் வீடு” |
ராணுவத்தில் பணியாற்றி விட்டு பின்னர் சினிமாவுக்கு வந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோதே அதை உதறிவிட்டு ராணுவத்தில் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி.
கிருஷ்ணமூர்த்தி பாரம்பரிய இசை குடும்பத்தை சேர்ந்தவர். அக்காலத்தில் பிரபலமான 'சுகுண விலாச சபை 'என்ற நாடகக் குழுவில் சேர்ந்து தனது 7வது வயதிலிருந்து நடிக்கத் தொடங்கினார். இவர் நடித்த 'பிரகலாதா' என்ற நாடகம் திரைப்படமானபோது அதில் கிருஷ்ணமூர்த்தி பிரகலாதனாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். டி. சி. வடிவேல் நாயக்கர் இயக்கியிருந்தார்.
கிருஷ்ணமூர்த்தியின் தந்தை தனது குடும்பத்தினரின் பாடல்களை இசைத்தட்டுகளில் வெளியிடுவதற்காகவே "சைனிங் ஸ்டார் சொசைட்டி" என்ற நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் சில நாடகங்களைத் தயாரித்தார். அவற்றில் கிருஷ்ணமூர்த்தியும் அவரது குடும்பத்தினரும் பாடி, நடித்தனர். அதோடு இந்த நிறுவனம் ஏகநாத், சக்திமாயா ஆகிய திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்டது. இவற்றிலும் கிருஷ்ணமூர்த்தியும் அவரது சகோதரரும் நடித்தனர்.
1941ம் ஆண்டு வெளிவந்த ஜெமினியின் 'மதனகாம ராஜன்' திரைப்படத்தில் மந்திரி மகன் குணசீலனாக நடித்தார். இத்திரைப்படத்தில் இவர் பாடிய 'கதை ஒன்று சொல்லுவேன் கேள் பாவாய்' என்ற பாடல் மிகவும் பிரபலமானது. அதன்பிறகு என் மகன், தியாகி, உதயணன் வாசவத்தா, கோகுலதாசி, வினோதினி ஆகிய படங்களில் நடித்தார்.
அடிப்படையில் டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரரான இவர் உடலை பிட்டாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தினார். இரண்டாம் உலக போர் தொடங்கியபோது நடிப்பதை கைவிட்டு ராணுவத்தில் சேர்ந்தார். போர் முடிந்ததும், டில்லி அகில இந்திய வானொலியில் சேர்ந்து பணியாற்றினார்.