'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
'பாட்ஷா, வீரா, சத்யா, அண்ணாமலை' போன்ற வெற்றி படங்களை இயக்கிய சுரேஷ்கிருஷ்ணா ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு இல்லாத காரணத்தால் சின்னத்திரைக்கு திரும்பினார். இப்போது மீண்டும் படம் இயக்கி உள்ளார். அந்த படத்தில் ஒய்.ஜி. மகேந்திரன் ஹீரோ, படத்தின் தலைப்பு 'சாருகேசி'. இசை சம்பந்தப்பட்ட கதையான இதில், சத்யராஜ், சமுத்திரகனி, சுஹாசினி, ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். சிந்து பைரவி, சங்கராபரணம் பாணியில் தயாராகிறது. கர்நாடக சங்கீதா பாடகராக ஒய்.ஜி.மகேந்திரன் வருகிறார். இவரின் சாருகேசி என்ற மேடை நாடகமே திரைப்படமாக உருவாகியுள்ளது.
இது குறித்து சுரேஷ்கிருஷ்ணா பேசுகையில், ''ரஜினி சார் இந்த நாடகத்தை பார்த்துவிட்டு படமாக எடுங்கள் என்று சொல்லியிருக்கிறார். நானும் அதை சொல்ல, படம் தயாரானது. சாருகேசி நாடகத்தைப் பார்த்ததும் இரண்டு நாட்களில் திரைக்கதை எழுதி விட்டேன், இசையமைப்பாளராக தேவாவை கமிட் செய்தோம். இந்த படத்தில் பாடல் பாடிய சங்கர் மகாதேவனுக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும். தேவா இசையமைக்க, அடுத்த நிமிடமே பாடல் வரிகளை எழுதிக் கொடுத்தார் பா விஜய். அதே போல வசனமும் சிறப்பாக எழுதியுள்ளார்.
பா விஜய்யை சமுத்திரகனி, சத்யராஜ் என அனைவரும் பாராட்டினர். சத்யராஜ் முதல் முறையாக ஒரு படத்தை பார்த்து அழுதது இதுதான் என்று நினைக்கிறேன். தலைவாசல் விஜய் சிறப்பாக நடித்துள்ளார். ரம்யா பாண்டியன் நடிப்பை அனைவரும் பாராட்டினர். ஒய் ஜி மகேந்திரன் இல்லை என்றால் சாருகேசி என்ற படமே இல்லை. நாடகத்திற்கும், சினிமாவிற்கும் வித்தியாசத்தை புரிந்து கொண்டு சிறப்பான நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளார். 75 வயதிலும் இவ்வளவு சுறுசுறுப்பாக ஞாபக சக்தியுடன் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது'' என்றார்.