சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
பத்திரிகையாளர்கள் இயக்குனராவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் அடுத்து வருகிறார் அரவிந்த் ஸ்ரீனிவாசன். அருள்நிதி நடிக்கும் தேஜாவு படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறார். இந்த படத்தில் மதுபாலா, ஸ்மிருதி வெங்கட், காளி வெங்கட், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
படம் பற்றி அரவிந்த் ஸ்ரீனிவாசன் கூறியதாவது: இது ஒரு த்ரில்லர் கதை. பல்வேறு த்ரில்லர் கதைகளில் அருள்நிதி நடித்திருந்தாலும் இது அவருக்கு முற்றிலும் வித்தியாசமான படமாக இருக்கும். இதில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தாலும் படத்தில் சீருடை எதுவும் அணிந்திருக்க மாட்டார்.
நாம் ஒரு புதிய இடத்துக்கு சென்றாலோ, அல்லது புதிய மனிதரை சந்தித்தாலோ, புதிய நிகழ்வு ஒன்றை சந்தித்தாலோ, அது நாம் ஏற்கெனவே பார்த்தமாதிரி, நமக்கு நடந்த மாதிரி இருக்கும். இதைத்தான் உலகம் முழுக்க தேஜாவு என்பார்கள். அதைத்தான் படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறோம்.
அடுத்த காட்சி என்ன என்பதை பார்வையாளர்கள் யூகிக்க முடியாத அளவுக்கு படம் இருக்கும். இந்தக் கதைக்களத்துக்குப் பாடல்கள் தேவைப்படாததால் வைக்கவில்லை. ஜிப்ரானின் பின்னணி இசை படத்துக்கு பலமாக இருக்கும்.
மதுபாலா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். தமிழ்நாட்டில் பெரும்பாலும் காவல்துறை உயர் அதிகாரிகள் வடநாட்டவர்களாக இருப்பதால் மதுபாலாவை இதில் காவல்துறை அதிகாரியாக நடிக்க வைத்திருக்கிறோம். ஸ்மிருதி வெங்கட் கதாபாத்திரத்தைச் சுற்றித்தான் கதை நகரும். தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகி உள்ளது. தமிழில் அருள்நிதியும், தெலுங்கில் நவீன் சந்திராவும் நடித்துள்ளனர். என்றார்.