ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சிவாஜி குடும்பத்தை கவுரவிக்கும் பராசக்தி படக்குழு | விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லன் விஜய் சேதுபதி...? |

திமுக குடும்பத்தைச் சேர்ந்த உதயநிதி ஸ்டாலின், தயாநிதி அழகிரி , அருள்நிதி ஆகிய மூவருமே சினிமாவில் பங்களித்து வருகிறார்கள். இவர்களில் உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் படங்கள் தயாரிப்பதோடு, பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து வந்தார். தயாநிதி அவ்வப்போது படங்கள் தயாரிக்கும் நிலையில், அருள்நிதி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள கழுவேத்தி மூர்க்கன் நாளை மறுநாள் திரைக்கு வரவுள்ளது. உதயநிதி தற்போது அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். அவரின் கடைசி படமான மாவீரன் அடுத்தமாதம் ரிலீஸாக உள்ளது.
இதனிடையே சென்னையில் நடைபெறும் அனைத்து பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளை தவறாமல் பார்த்து வருகிறார் உதயநிதி. சென்னை - குஜராத் அணிகள் மோதிய பிளே ஆப் சுற்று போட்டியை கண்டுகளித்தார் உதயநிதி. இதில் தோனி தலைமையிலான சென்னை அணி வெற்றி பெற்று முதல் அணியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியை உதயநிதியுடன் அவரது சகோதரர்களான தயாநிதி, அருள்நிதியும் கண்டுகளித்துள்ளார்கள்.
மூன்று பேரும் ஒன்றாக அமர்ந்து போட்டியை பார்த்தபோது எடுத்த புகைப்படத்தை தனது வெளியிட்டு, ‛‛ஹேப்பி பிரதர்ஸ் டே என்றும் பதிவிட்டு தனது சகோதரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் அருள்நிதி. மே 24ம் தேதியான இன்று பிரதர்ஸ் டே கொண்டாடப்பட்டு வருவதால் இந்த புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார்.