இத்தனை வயதிலும் பிகினியில் அசத்தும் ஸ்ரேயா | நான் உயிர் உள்ள மனுஷி - சாய் பல்லவி | மீண்டும் புத்துயிர் பெறும் 'சங்கமித்ரா' | சினிமாவில் வெற்றி தான் முக்கியம் : மணிகண்டன் | நீக் படத்திற்கு எஸ்.ஜே.சூர்யா விமர்சனம் : தனுஷ் நன்றி | முதல் 3 நாட்களில் 12 கோடி வசூலித்த கங்கனாவின் 'எமர்ஜென்சி' | 2025ல் ராஷ்மிகாவின் முதல் படம் பிப்ரவரி 14ல் வெளியாகிறது! | பிரேமலு 2ம் பாகம் அப்டேட் | காதலியை மணந்தார் இயக்குனர் அஜய் ஞானமுத்து | கவுதம் மேனன் இயக்கத்தில் ரவி மோகன் |
அஜித் நடிக்கவிருக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே உலகம் முழுவதும் பைக்கில் பயணம் செய்து வருகிறார் அஜித்குமார். சமீபத்தில் அண்டை நாடுகளான நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளுக்கும் பைக் ரைடு சென்றார். அது குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகின . சில தினங்களுக்கு முன் ஏகே மோட்டோ ரைடு என்ற பைக் சுற்றலா நிறுவனம் ஒன்றை துவங்குவதாக அறிவித்தார் அஜித். இந்த நிலையில் தன்னுடன் சேர்ந்து பைக் ரெய்டு செய்து வரும் குழுவினர்களில் ஒருவரான சுகத் என்ற நபருக்கு 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ பைக் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார் அஜித். தனது பைக் ரைடுக்கு சரியாக திட்டமிட்டு ஏற்பாடுகளை செய்து வருவது இவர்தான் என்பதால் அவரை பாராட்டி அவருக்கு இந்த பரிசை கொடுத்திருக்கிறார் அஜித்.