சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஹன்சிகா. சமீபத்தில் சோஹைல் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஹன்சிகா, திருமணத்துக்கு பிறகும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சினிமாவில் நடிக்க வந்த புதிதில் தெலுங்கு சினிமாவைச் சார்ந்த ஒரு நடிகர், தன்னை டேட்டிங்கிற்கு அழைத்து, துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும், அந்த நடிகருக்கு சரியான பாடம் புகட்டியதாகவும் ஹன்சிகா ஒரு பேட்டியில் தெரிவித்ததாக செய்தி வைரலாக பரவியது.
இதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளார் ஹன்சிகா. அவர் வெளியிட்ட பதிவு, ‛‛இதுபோன்ற ஒரு விஷயத்தை நான் பேசவே இல்லை. எந்த ஒரு செய்தியாக இருந்தாலும் அதை வெளியிடுவதற்கு முன்பு உண்மை தன்மையை அறிந்து அதன் பின்பு வெளியிடவும் என குறிப்பிட்டுள்ளார்.




