பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
தமிழ் சினிமாவில் இதுவரையில் வெளிவந்த சிறந்த காதல் சினிமா படங்களின் வரிசையில் 'தீராக் காதல்' படமும் இடம் பெறும் என்ற ஒரு எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது.
ரோஹின் வெங்கடேசன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜெய், ஷிவதா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இச்செய்தியின் தலைப்பில் உள்ள 'தி.மு, தி.பி'--க்கும் இந்தப் படத்திற்கும் ஒரு தொடர்பு உள்ளது. அதாவது 'திருமணத்திற்கு முன், திருமணத்திற்குப் பின்' என்பதுதான் அது.
படத்தில் ஜெய், ஷிவதா கணவன் மனைவி. ஜெய்யின் வாழ்க்கையில் அவரது முன்னாள் காதலி ஐஸ்வர்யா ராஜேஷ் மீண்டும் வர அதனால் நடக்கும் பிரச்சினைகள்தான் படத்தின் கதை என்பது டிரைலரைப் பார்க்கும் போது புரிகிறது.
ஜெய் இதற்கு முன்பு நடித்த 'ராஜா ராணி' படமும் அப்படியான ஒரு காதல் படமாக அமைந்து அவருக்கு பெரிய வெற்றியையும், பேரையும் பெற்றுத் தந்தது. இந்தப் படமும் அது போன்ற ஒரு காதல் கதை என்பதால் அது போல மீண்டும் ஒரு வெற்றியைப் பெறுவார் என எதிர்பார்ப்புள்ளது. நாளை மறுதினம் வெளிவர உள்ள இந்த 'தீராக் காதல்' ரசிகர்களைத் திருப்திப்படுத்த வாய்ப்புள்ளது.