விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு பல விதமான கட்டுப்பாடுகள் தளர்ந்துவிட்டன. தங்களது கருத்துக்கள், தங்களது பதிவுகள், தங்களது வீடியோக்கள் வைரலாக வேண்டுமென்று பலரும் நினைக்கிறார்கள். அதற்கு பிரபலங்களும் விதிவிலக்கல்ல. ஆனால், விதிகளை மீறி பிரபலங்களோ, பொதுமக்களோ செயல்படும் போது அவற்றின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே வலுத்து வருகிறது.
பாரதப் பிரதமர் மோடி 'டிக் டாக்' உள்ளிட்ட சீன செயலிகளை தடை செய்த போது பலரும் அதை வரவேற்றனர். 'டிக் டாக்' செயலில் பல விதமான வீடியோக்களை வரைமுறையில்லாமல் பதிவிட்டு கலாச்சார சீரழிவுக்கும் சிலர் வழி வகுத்தனர்.
நேற்று நடிகை யாஷிகா ஆனந்த் ஓட்டிய கார் சென்னை, அருகே மாமல்லபுரத்தில்  கடும் விபத்தில் சிக்கி, அவருடன் பயணித்த தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகாவும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். யாஷிகா மீது வழக்குகள் பதிந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
யாஷிகாவுக்கு நேற்று நடந்த விபத்து பற்றி சமூக வலைத்தளங்களில் பலரும் பலவிதமான கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள். விபத்தில் அகால மரணமடைந்த யாஷிகாவின் தோழி பவனி வலிசெட்டியின் சகோதரி, தனது அக்கா மறைவுக்கு உருக்கமான பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். 
“உண்மையாகச் சொல்ல வேண்டுமென்றால், நாங்கள் இப்போது எப்படியிருக்கிறோம் என்பதை விவரிக்க முடியாத நிலையில் உள்ளேன். எங்களது அன்புக்குரிய பவனி தற்போது இல்லை என்பதையும் எங்கள் இதயத்திலிருந்து ஜீரணிக்க முடியாத நிலையில் உள்ளோம் என்பதையும் அறிவேன்.  எங்களை நிம்மதியா துக்கப்படவிடுங்கள், உங்கள் அக்கறைக்கும், இரங்கலுக்கும் நன்றி,” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் அந்தப் பதிவைத் தேடும் போது யாஷிகா ஆனந்தின் பழைய வீடியோ பதிவு ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. அதில் காரை ஓட்டிக் கொண்டே யாஷிகாவும் அவருடன் இருக்கும் சில தோழிகளும் 'எஞ்சாமி' பாடலைப் பாடிய வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்கள்.
சமீப காலங்களில் நடிகர் விஜய் மகன் உட்பட பலரும் இப்படி கார்களில் பயணிக்கும் போதும், ஓட்டிக் கொண்டிருக்கும் போதும் எடுக்கும் வீடியோக்களைப் பதிவிட்டு அவை வைரலானது. அதைப் பார்த்து பலரும் தாங்களும் அப்படி காரை ஓட்டிக் கொண்டே  பதிவிடுவது எவ்வளவு ஆபத்தானது என்பதை உணராமல் பதிவிடுகிறார்கள்.
இப்படியான வீடியோக்களைப் பதிவிடுபவர்கள் மீது போக்குவரத்து விதிகளின்படி காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தால்தான் மற்றவர்களும் அம்மாதிரியான தவறுகளைச் செய்வதைத் தடுக்க முடியும்.