என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்தாலும் பல இசையமைப்பாளர்களும் அவருக்கு ரசிகர்களாகவே இருக்கிறார்கள். இளையராஜாவின் இசையின் பெருமையைப் பற்றி உணர்ந்தவர்கள் அவர்களும் தானே. அப்படி இளையராஜாவின் ரசிகராக அவருடைய இசைக் கூடத்தின் முன்பு 'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' படங்களின் இசையமைப்பாளரான கீரவானி என்கிற மரகதமணி ஒரு செல்பி புகைப்படத்தை எடுத்துள்ளார். அதோடு அவரையும் சந்தித்து பேசி உள்ளார்.
இதுப்பற்றி கீராவானி டுவிட்டரில் பதிவிட்டு, “காம்தா நகரை கடந்து போகும் போது, இந்த பில்டிங் முன்னால் எடுத்துக் கொண்ட செல்பி மூலம் இன்றைய நாள் சிறப்பான நாள்” எனப் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு டுவீட்டில் இளையராஜாவை சந்தித்த போட்டோவை பகிர்ந்து, ‛‛செல்பி கிப்ட் கிடைத்த சில நிமிடங்களில் இளையராஜாவை சந்தித்தது சிறப்பான நாளாக அமைந்தது'' என பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் பாலசந்தர் தான் இயக்கிய, மம்முட்டி, பானுப்ரியா நடித்த 'அழகன்' படத்தின் மூலம் மரகதமணியை தமிழில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து நீ பாதி நான் பாதி, பாட்டொன்று கேட்டேன், சிவந்த மலர், சேவகன், ஜாதி மல்லி, பிரதாப், ஹீரோ, கொண்டாட்டம், நான் ஈ” ஆகிய படங்களுக்கு மரகதமணி என்ற பெயரில் இசையமைத்துள்ளார் கீரவானி.