நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

காப்புரிமை தொடர்பாக, சோனி நிறுவனம் தொடர்ந்த வழக்கை மும்பை ஐகோர்ட்டில் இருந்து, சென்னை ஐகோர்ட்டிற்கு மாற்றக்கோரிய இளையராஜாவின் மனு, சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
தங்களுக்கு உரிமை வழங்கப்பட்ட 228 ஆல்பம் பாடல்களை 3ம் நபர்களுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கியிருப்பதாக கூறி, சோனி நிறுவனம், இளையராஜா நிறுவனத்தின் மீது மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இளையராஜாவின் நிறுவனம் அவ்வாறு செய்யாமல் இருக்கும் வகையில் தடை விதிக்கவும், இடைக்கால நிவாரணம் கோரியும் சோனி நிறுவனம் 2022ல் தொடர்ந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், சோனி நிறுவனத்தின் வழக்கை சென்னை ஐகோர்ட்டிற்கு மாற்ற கோரி, இளையராஜா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (ஜூலை 28) சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதிகள் கே.வினோத் சந்திரன் மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இளையராஜாவின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.