ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் |
பாண்டிராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில், விஜய் சேதுபதி, நித்யா மேனன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'தலைவன் தலைவி'. இப்படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் வந்தாலும், தியேட்டர்களில் ரசிகர்கள் குடும்பத்துடன் வந்து பார்த்து வருகிறார்கள். மீண்டும் இப்படியான ரசிகர்கள் கூட்டம் சுமார் 90 நாட்களுக்குப் பிறகு வருவது தியேட்டர்காரர்களை மகிழ்விக்க வைத்துள்ளது.
கடந்த மூன்று நாட்களில் இப்படம் 25 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விஜய் சேதுபதி, இயக்குனர் பாண்டிராஜ் ஆகியோருடைய முந்தைய படங்கள் எதிர்பார்த்த அளவு வசூலைத் தரவில்லை, பெரிய அளவில் வரவேற்பையும் பெறவில்லை. எனவே, இந்தப் படம் அவர்கள் இருவருக்கும் முக்கியமானதாக இருந்தது. அவர்கள் எதிர்பார்த்தபடி இந்தப் படம் வசூல் ரீதியாக முன்னேறி வருகிறது.
இப்படத்துடன் வெளியான 'மாரீசன்' படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதன் வசூல் குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.