ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக உள்ள படம் 'கூலி'. இப்படத்திற்கான அமெரிக்கா முன்பதிவு கடந்த வாரம் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரிமியர் காட்சிகளுக்கான முன்பதிவுகளும் நடந்து வருகிறது.
அங்கு அமெரிக்க நேரப்படி ஆகஸ்ட் 13ம் தேதி மாலை 6.30 மணிக்கே பிரிமியர் காட்சிகளை நடத்திக் கொள்ள தயாரிப்பு நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளதாக அங்கு படத்தை வெளியிடும் வினியோக நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த நேரம் இந்திய நேரப்படி ஆகஸ்ட் 14ம் தேதி அதிகாலை 4 மணி.
இந்தியாவில் முதல் காட்சி காலை 9 மணிக்கு ஆரம்பமாவதுதான் கடந்த மூன்று வருட வழக்கமாக உள்ளது. தற்போது அமெரிக்காவில் இந்திய நேரத்தை விட முன்னதாகவே அனுமதி அளித்துள்ளார்கள். எனவே, இந்தியாவிலும் முதல் காட்சி அதிகாலை 5 மணிக்கு இருக்குமா என ரஜினி ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இங்கு அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. கடந்த மூன்று வருடங்களாக முன்னணி நடிகர்களின் படங்களுக்கு வழங்கப்படாத அனுமதி 'கூலி' படத்திற்கு மட்டும் வழங்கப்படுமா என்பது தெரியவில்லை. அப்படியே வழங்கினாலும் அது சர்ச்சையை ஏற்படுத்த வழி வகுக்கும்.