நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

திரைப்பட நடிகர், டிவி ஷோ ஜட்ஜ், கேட்டரிங் நிபுணர் என பிரபலமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். அவருடன் இருக்கும் சில புகைப்படங்களைப் பகிர்ந்து கர்ப்பமாக இருக்கிறேன் என பிரபல சினிமா ஆடை டிசைனர் ஜாய் கிறிஸில்டா கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கெனவே அவரது மாமா பெண்ணான ஸ்ருதி என்பவரைத் திருமணம் செய்து கொண்டவர். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ஸ்ருதி வக்கீலாகவும் இருக்கிறார். இருந்தாலும் தனது முதல் மனைவியான ஸ்ருதியை இன்னும் விவகாரத்து செய்யாமல் இருக்கிறார் ரங்கராஜ் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஒரு வருட காலமாக ரங்கராஜ், கிறிஸில்டா காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. கிறிஸில்டா கடந்த இரண்டு தினங்களாகப் பதிவிட்ட பதிவுகளையும் ரங்கராஜ் இதுவரை ஷேர் செய்யவில்லை. தன்னை ரங்கராஜ் ஏமாற்றிவிடக் கூடாது என கிறிஸில்டா இப்படி பகிர்ந்துள்ளதாகவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். இது குறித்து ரங்கராஜ் ஏதாவது வெளிப்படையாகச் சொன்னால்தான் உண்மை நிலவரம் என்ன என்பது தெரிய வரும்.