காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
கடந்த சில தினங்களுக்கு முன்பு மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவியான ஜாய் கிரிசில்டா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவர் மீது ஒரு புகார் அளித்தார். அதையடுத்து மீடியாக்களை சந்தித்தபோது, கடந்த ஜூலை 26ம் தேதி மாதம்பட்டி ரங்கராஜுடன் தனக்கு எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. தற்போது 7 மாதம் கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவர் தன்னை கருவை கலைக்க சொல்லி துன்புறுத்துவதாகவும், தற்போது தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டதாகவும் கூறியிருந்தார். அதோடு தன்னோடு மாதம்பட்டி ரங்கராஜுடன் சேர்ந்து வாழ போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அந்த புகாரில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் பேசிய ஒரு வீடியோவை பகிர்ந்து உள்ளார் ஜாய் கிரிசில்டா. அதில், வீட்டுக்கு சென்று குளித்துவிட்டு டிரஸ் மாற்றி விட்டு வந்துள்ளேன். இண்டர்வியூ முடிந்துவிட்டது. நாலு மணிக்கு அடுத்த மீட்டிங். மூன்று முப்பது மணிக்கு கிளம்பி போகணும் ஐ லவ் யூ பொண்டாட்டி என்று அந்த வீடியோவில் பேசி இருக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ்.
நேற்று முன்தினம் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த ஜாய் கிரிசில்டா, இன்று இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் ரங்கராஜ் உடன் அவர் நெருக்கமாக இருந்த போட்டோக்களையும் ரீல்ஸாக மற்றொரு வீடியோவில் வெளியிட்டுள்ளார்.