தமிழுக்கு வருகிறார் ஜான்வி கபூர் | புதிய பிராண்ட் கார் வாங்கிய சீரியல் நடிகை வைஷாலி தனிகா! | ரஜினிக்கு எழுதிய கதையை சூர்யாவுக்காக திருத்தம் செய்த கார்த்திக் சுப்பராஜ்! | சிவகார்த்திகேயன் - ஸ்ருதிஹாசனை இயக்கும் லோகேஷ் கனகராஜ்! | வேட்டையனை தொடர்ந்து ஜெயிலர் -2விலும் ரஜினியுடன் இணைந்த பஹத் பாசில்! | காஷ்மீர் தாக்குதல்: உயிர் தப்பிய பாலிவுட் நடிகை | சொட்டைத் தலையர்களின் கதை 'சொட்ட சொட்ட நனையுது' | பெரிய பட்ஜெட்டில் உருவான 'டிடி நெக்ஸ்ட் லெவல்': சந்தானம் தகவல் | நான் சிம்ரனோடு நடிக்க கூடாதா: சசிகுமார் கேள்வி | பிளாஷ்பேக்: அப்போதே அதிர வைத்த திகில் படம் |
தென்னிந்திய நடிகர் சங்கம் என சென்னையில் பழம் பெரும் சங்கம் இருந்தால், சென்னையிலிருந்து மற்ற மாநிலங்களுக்கு திரைப்படத் தொழில் நகர்ந்ததால் மொழி வாரியாக ஒவ்வொரு மாநிலத்திலும் தனி நடிகர் சங்கம் உருவானது. ஆனால், தமிழில் மட்டும்தான் இன்னமும் தென்னிந்திய நடிகர் சங்கம் என இருக்கிறது.
தெலுங்கு நடிகர் சங்கத்தின் (MAA) பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், புதிய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. கடந்த முறை போலவே இந்த முறையும் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த நடிகர் பிரகாஷ் ராஜ், தெலுங்கு நடிகர் சங்கத்தின் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்த உடனேயே சர்ச்சை ஆரம்பமானது. வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர் எப்படி போட்டியிடலாம் என சிலர் சர்ச்சை எழுப்பினார்கள். ஆனால், தெலுங்கில் அதிகப் படங்களில் நடித்துள்ளதாகவும், தெலுங்குப் படம் மூலம் தான் தேசிய விருது பெற்றதாகவும், தனக்கு ஐதராபாத்தில் வீடு இருக்கிறது, தனது குழந்தை இங்குதான் படிக்கிறார் என்றும் தனது வாதத்தை எடுத்து வைத்தார் பிரகாஷ்ராஜ்.
ஆனாலும், இப்போது அவரை கர்நாடகாவைச் சேர்ந்தவராகத் தான் பார்க்கிறார்கள். பிரகாஷ் ராஜுக்குப் போட்டியாக மஞ்சு விஷ்ணு, ஹேமா, ஜீவிதா ஆகியோர் தேர்தலில் நிற்கிறார்கள். மேலும், புதிதாக பாஜகவைச் சேர்ந்த நரசிம்மராஜ் என்ற மூத்த நடிகர் ஒருவர் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். அவருக்கு தன்னுடைய ஆதரவு இருக்கிறது என பாஜகவைச் சேர்ந்தவரும் நடிகையுமான விஜயசாந்தி தெரிவித்துள்ளார்.
பாஜகவிற்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கருத்துக்களைச் சொல்பவர் பிரகாஷ் ராஜ் என்பதால் அவர் போட்டியிட எதிர்ப்பும் அதிகமாகி இருக்கிறது. ஜீவிதாவும் பாஜகவைச் சேர்ந்தவர் தான். பிரகாஷ்ராஜுக்கு சிரஞ்சீவி குடும்பத்தினர் ஆதரவு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம் சிரஞ்சீவி குடும்பத்திற்கு எதிராக பாலகிருஷ்ணா குடும்பத்தினர் இருப்பார்கள் என்பது தெலுங்குத் திரையுலகில் இருக்கும் மற்றொரு அரசியல்.
இந்தத் தேர்தல் மூலம் தெலுங்கு நடிகர் சங்கத்திலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.