பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' |
மலையாள திரையுலகில் கடந்த வருடம் வெளியான ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கம் காரணமாக மலையாள நடிகர் சங்கத்திற்குள் பல குழப்பங்கள் ஏற்பட்டன. நடிகர் சங்க நிர்வாகிகள் பலர் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகினர். இதனைத் தொடர்ந்து இதற்கு தார்மீக பொறுப்பேற்று நடிகர் மோகன்லால் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் சங்கத்திற்கான புதிய தேர்தல் நடைபெற்று முதல் பெண் தலைவராக நடிகை ஸ்வேதா மேனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பெண் ஒருவர் தலைவராக வந்துள்ளதால் நடிகைகள் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் கொஞ்சம் கொஞ்சமாக முடிவுக்கு வரும் என அனைவரும் நம்புகிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் மோகன்லால் இருந்த இடத்திற்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள், அதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என கேட்டபோது ‛‛உண்மையிலேயே எனக்கு ஹேமா கமிஷன் அறிக்கை கொடுத்த அதிர்ச்சியை விட லாலேட்டன் (மோகன்லால்) ராஜினாமா செய்து விட்டு சென்றது தான் மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது'' என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, “மோகன்லால் நல்ல தலைமை பண்பு கொண்டவர். அவரின் கீழ் நான் பணியாற்றி இருக்கிறேன். தோல்வியை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ளும் நபர் அவர் அல்ல. அவர் கார்னர் செய்யப்பட்டோ அல்லது தனிமைப்படுத்தப்பட்டோ தான் இப்படி ஒரு முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் என்பது தான் உண்மை. அதனால் ராஜினாமா என்பது அவராக எடுத்த இயல்பான முடிவு அல்ல” என்று கூறி இருக்கிறார் ஸ்வேதா மேனன்.