ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' | பிளாஷ்பேக் : சொந்த வாழ்க்கை கதையில் நடித்த சுதா சந்திரன் | பிளாஷ்பேக் : பத்மினி சகோதரிகள் போல், நாட்டியத்தில் ஜொலித்த சாயி சகோதரிகள் | 'மை டியர் சிஸ்டர்' என்ன மாதிரியான கதை | வெப் தொடரில் விஜய்சேதுபதி மகன் | நானும் ஐஸ்வர்யா ராஜேஷ் அப்பாவும் நண்பர்கள் : நடிகர் அர்ஜூன் | லாட்டரி சீட்டு பின்னணியில் 80களின் நடக்கும் கதை ‛ராபின்ஹுட்' |

பாலிவுட்டின் பிரபல நடிகர் தர்மேந்திரா. 70, 80களில் முன்னணி நடிகராக கோலோச்சியவர். 90 வயது நெருங்கி உள்ள இவர் வயது மூப்பால் வரும் உடல்நல பிரச்னை காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முதலே இவரது உடல்நிலை குறித்து தவறான தகவல்கள் வருகின்றன. ஆனால் குடும்பத்தினர் மறுத்து வந்தனர். இன்று காலை அவர் இறந்ததாக தேசிய அளவில் பெரும்பாலான ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால் சற்றுநேரத்திலேயே தர்மேந்திராவின் மகள் இஷா அதை மறுத்தார். அவர் நலமாக இருப்பதாகவும் கூறினார்.
இந்நிலையில், தர்மேந்திராவின் மனைவியும், நடிகையுமான ஹேமமாலினி வெளியிட்ட பதிவில், ‛‛சிகிச்சையில் குணமடைந்து வரும் ஒருவரை பற்றி எவ்வாறு தவறான செய்திகளைப் பரப்ப முடியும்? இது அவமரியாதை மற்றும் பொறுப்பற்ற செயல். மன்னிக்க முடியாதது. தயவுசெய்து குடும்பத்திற்கு உரிய மரியாதையையும், அதன் தனிமைக்கான தேவையையும் கொடுங்கள்'' என பதிவிட்டுள்ளார்.