'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருந்த தர்மேந்திரா, நடிகையாக இருந்த ஹேமமாலினி ஆகியோர் இன்று தங்களது 43வது திருமண நாளைக் கொண்டாடி உள்ளனர். அது பற்றிய தகவலைப் பகிர்ந்து தனது கணவர் தர்மேந்திராவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் ஹேமமாலினி.
தமிழகத்தைச் சேர்ந்த ஹேமமாலினி, தமிழ்ப் படங்களில் நடிக்க முயன்று ஓரிரு படங்களில் மட்டும் முக்கியத்துவமில்லாத கதாபாத்திரங்களில் நடித்தார். அதன்பின் ஹிந்தியில் ராஜ்கபூரின் 'சப்னோ கா சௌதாகர்' படம் மூலம் 1968ம் ஆண்டு அறிமுகமானார். அதன்பின் பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக உயர்ந்தார் ஹேமமாலினி.
1970ல் தர்மேந்திரா ஜோடியாக 'தும் ஹசின் மெய்ன் ஜவான்' என்ற படத்தில் முதல் முறையாக நடித்தார். ஏற்கெனவே திருமணமாகி இரண்டு மகன்கள், இரண்டு மகள்களுடன் இருந்த தர்மேந்திராவை 1980ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் ஹேமமாலினி. அவர்களுக்கு இஷா தியோல், அஹானா தியோல் என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். மணிரத்னம் இயக்கிய 'ஆய்த எழுத்து' படத்தில் சூர்யா ஜோடியாக நடித்தவர் இஷா தியோல்.
இன்று திருமண நாளைக் கொண்டாடும் ஹேமமாலினி, தர்மேந்திரா தம்பதியினருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.