தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

2003ம் ஆண்டு இதே நாளில் வெளிவந்த 'ஜெயம்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் ரவி. இப்போது, இப்படி சொன்னால் பலருக்கும் தெரியாது, 'ஜெயம் ரவி' என்று சொன்னால் மட்டுமே தெரியும். அந்த அளவிற்கு தான் நாயகனாக அறிமுகமான முதல் படத்தின் பெயரே ரவிக்கு ஒரு அடையாளமாக மாறிப் போனது.
அப்பா தயாரிக்க, அண்ணன் இயக்க ஒரு குடும்பப் படத்தில்தான் அறிமுகமானார் ஜெயம் ரவி. அந்தப் படத்திற்குக் கிடைத்த வரவேற்பு அவரை தமிழ் சினிமாவில் 18 வருடங்கள் வெற்றிகரமாக நடைபோட உதவியுள்ளது. குடும்பமே கலைக்குடும்பமாக இருந்தாலும் தனித் திறமை இல்லை என்றால் இத்தனை காலம் தாக்குப் பிடிக்க முடியாது.
அண்ணன் இயக்கத்தில் அடுத்தடுத்து 'எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம்' என வெற்றி கொடுத்தாலும் ஆரம்ப காலங்களில் மற்ற இயக்குனர்களின் படங்களில் ஜெயம் ரவி நடித்த படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. 2009ம் ஆண்டில் வெளிவந்த 'பேராண்மை' படம் தான் அவருக்கு அந்த வெற்றியைப் பெற்றுத் தந்தது. அந்தப் படம் மூலம் ஆக்ஷன் ஹீரோவாகவும் உயர்ந்தார்.
தொடர்ந்து வெற்றி, தோல்வி என மாறி மாறி பயணித்து வந்தாலும் அவருடைய மார்க்கெட்டை அப்படியே தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். “நிமிர்ந்து நில், ரோமியோ ஜுலியட், தனி ஒருவன், பூலோகம், மிருதன், போகன், டிக் டிக் டிக், அடங்க மறு, கோமாளி' ஆகிய படங்களில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்துள்ளன.
தற்போது 'ஜனகனமன, பொன்னியின் செல்வன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. அனைத்து விதமான ரசிகர்களும் ரசிக்கும் விதமான படங்களைக் கொடுப்பதே ஜெயம் ரவியின் தொடர்ச்சியான ஜெயத்திற்குக் காரணம்.