வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் | நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா | பேனர் வைக்க விடாமல் தடுத்தது யார்? மனம் திறப்பாரா கேபிஒய் பாலா | புகழ் நடிக்கும் '4 இடியட்ஸ்' | பூ வச்சது குத்தமாய்யா : நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் | சினிமா நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் ஸ்ரீகாந்த் | ‛குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை | ரஜினி, கமல் பட இயக்குனர் யார்? இன்னும் தீராத சந்தேகம் |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. ஓடிடி தளத்தில் வெளியான 'த பேமிலிமேன் 2' வெப் தொடர் அவரை ஹிந்தி பேசும் ரசிகர்களிடமும் கொண்டு சென்றது. அந்தப் பிரபலத்தை வைத்து நெட்பிளிக்ஸ் ஒடிடி தளம் புதிய வெப் தொடர் ஒன்றில் சமந்தாவை நடிக்க வைக்க பேசுவதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால், அது புதிய வெப் தொடர் அல்லவாம்.
நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம், 'பாகுபலி' படத்தைத் தயாரித்த நிறுவனத்துடனும், இயக்குனர் ராஜமவுலியுடனும் இணைந்து 'பாகுபலி - பிபோர் தி பிகினிங்' என்ற ஓடிடி தொடரைத் தயாரிக்க முடிவு செய்தது. தேவ கட்டா, பிரவீன் சட்டரு இணைந்து ஓடிடி தொடரை உருவாக்கினார்கள். ஆனால், அத்தொடர் ஒளிபரப்பும் அளவிற்குத் தகுதியானதாக இல்லை என அத்தொடரை அப்படியே நிராகரித்தது.
அத்தொடரில் சிவகாமி கதாபாத்திரத்தில் நடித்த மிருணாள் தாக்கூரும் மீண்டும் இத்தொடரில் நடிக்க முடியாது என விலகிவிட்டார். வேறு இயக்குனர், வேறு நடிகையை வைத்து அத்தொடரை மீண்டும் தயாரிக்க நெட்பிளிக்ஸ் முடிவு செய்து பெரும் தொகை சம்பளம் தருவதாகச் சொல்லி சமந்தாவிடம் 'சிவகாமி' தொடரில் நடிக்க பேசியதாம். சமந்தா நடித்தால் பெரிய வரவேற்பைப் பெறும் என நினைத்த நிறுவனத்திடம் தொடரில் நடிக்க விருப்பமில்லை என சமந்தா நிராகரித்துவிட்டதாக டோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த சில வருடங்களுக்கு சினிமாவில் மட்டுமே நடிக்க சமந்தா நினைக்கிறார் என்றும் ஒரு தகவல்.