ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
தமிழில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நயன்தாரா, அவ்வப்போது தனது தாய் மொழியான மலையாளத்திலும், தெலுங்கிலும் நடிப்பார். அப்படி தெலுங்கில் 2012ம் ஆண்டு அவர் நடிக்க ஆரம்பித்த படம் 'ஆறடுகுலா புல்லட்'. இதில் நாயகனாக கோபிசந்த் நடித்துள்ளார்.
இப்படத்தை முதலில் தமிழ் இயக்குனரான பூபதி பாண்டியன் இயக்குவதாக இருந்தது. ஆனால், அவர் படத்திலிருந்து விலகிவிட்டார். பின்னர் தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பி.கோபால் படத்தை இயக்க ஆரம்பித்தார். ஐந்து வருடங்களாகத் தயாரிப்பில் இருந்து, 2017ல் இப்படத்திற்கான சென்சார் முடிந்தும் படம் பல்வேறு காரணங்களால் வெளியாகாமல் இருந்தது.
இப்போது அனைத்துப் பிரச்சினைகளையும் முடித்து படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். இரண்டு தெலுங்கு மாநிலங்களிலும் தியேட்டர்களைத் திறந்த பின் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்க உள்ளார்களாம்.
நயன்தாரா நடித்த ஒரு படம் இத்தனை வருடங்கள் தாமதமாக வெளிவந்ததே இல்லை. தற்போதைக்கு தமிழில் மட்டுமே படங்களில் நடிக்க நயன்தாரா கவனம் செலுத்தி வருகிறாராம்.