நீதிமன்றத்தில் நியாயம் கேட்கும் நாய் | பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆருடன் வாள் சண்டை போட்ட நடிகை | பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆருடன் மவுன யுத்தம் நடத்திய ஏ.எல்.சீனிவாசன் | ''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் |
இந்தியத் திரையுலகில் வரலாற்று வசூல் சாதனை புரிந்த படம் 'பாகுபலி'. இப்படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று ஆயிரம் கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளியது.
அப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம், படத்தைத் தயாரித்த நிறுவனத்துடனும், இயக்குனர் ராஜமௌலியுடனும் இணைந்து 'பாகுபலி - பிபோர் தி பிகினிங்' என்ற ஓடிடி தொடரைத் தயாரிக்க முடிவு செய்தது.
இத் தொடரில் 'ராஜமாதா சிவகாமி' கதாபாத்திரம்தான் முதன்மையான கதாபாத்திரமாக இருக்க கதை உருவாக்கப்பட்டது. அதன்படி தேவ கட்டா, பிரவீன் சட்டரு இணைந்து ஓடிடி தொடரை உருவாக்கினார்கள். வெளியிடத் தயாரான தொடரை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பார்த்ததாம். ஆனால், அவர்களது தரத்திற்கு தொடர் இல்லையென முற்றிலுமாக அதை நிராகரித்துவிட்டார்களாம். மீண்டும் படப்பிடிப்பை நடத்துங்கள் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால், சிவகாமி கதாபாத்திரத்தில் நடித்த மிருணாள் தாக்கூர் தான் மீண்டும் இத் தொடரில் நடிக்க முடியாது என விலகிவிட்டாராம். இப்போது வேறு ஒருவரை அக்கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாமா என யோசித்து வருகிறார்களாம். தொடருக்கான இயக்குனர்களும் மாற்றப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளித் திரையில் சாதனை படைத்த ஒரு படத்திற்கு ஓடிடி திரையில் இப்படி ஒரு நிலைமையா என ஆச்சரியப்படுகிறது திரையுலக வட்டாரம்.