ஓடிடி-க்கு தயாரான நானியின் 'கோர்ட்' | இந்திய பொழுதுபோக்கு துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும் : பிக்கி தலைவர் கமல் நம்பிக்கை | 2025 தமிழ் சினிமா - காலாண்டு ரிப்போர்ட் | பிளாஷ்பேக் : டி.ராஜேந்தரை ஹீரோவாக்கிய ரஜினி | பிளாஷ்பேக் : ஆதித்தியன் கனவை நனவாக்கிய பாடல் | ஜி.வி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" | திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? |
விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தை இணைந்து தயாரித்த செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள படம் 'துக்ளக் தர்பார்'.
டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் வெளியாகி மூன்று மாதங்கள் ஆகிவிட்டது-
இப்படத்தின் டீசர் வெளியான நாளிலிருந்தே இப்படம் ஓடிடி தளத்தில்தான் வெளியாகும் என்ற ஒரு தகவல் இருந்தது. தற்போது அதை உறுதி செய்துவிட்டதாகச் சொல்கிறார்கள். முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்று படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாம்.
பெரும் தொகை கொடுத்து வாங்கப்பட்டுள்ள இப்படத்தை எப்போது வெளியிட உள்ளார்கள் என்பது குறித்து அடுத்த சில வாரங்களில் அறிவிப்பு வரலாம்.
தியேட்டர்களில் 50 சதவீத அனுமதி, இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு ஆகிய காரணத்தால் தியேட்டர்கள் பழையபடி வசூல் நிலைமைக்கு வர இன்னும் சில மாதங்கள் ஆகலாம்.
அதற்குள் சில முக்கிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாக வாய்ப்புள்ளது. ஓடிடியில் வெளியிடப்படும் படங்கள் சம்பந்தப்பட்டவர்களின் அடுத்த படங்களுக்கு தியேட்டர்கள் வெளியீடு சிக்கல் இருக்கலாம் என்று பலரும் தயங்கினர்.
ஜோதிகா, சூரயா நடித்த படங்கள் ஓடிடியில் வெளியானதால் அவர்களது குடும்பத்தினர் நடிக்கும் படங்களை தியேட்டர்களில் வெளியிட மாட்டோம் என்று முன்னர் சொன்னார்கள். ஆனால், கார்த்தி நடித்த 'சுல்தான்' படத்திற்கு அப்படி எந்த ஒரு எதிர்ப்பும் வரவில்லை. எனவே, அடுத்து பலரும் ஓடிடியில் தங்கள் படங்களை வெளியிட பேசி வருவதாகச் சொல்கிறார்கள்.