ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
காமெடி நடிகர் செந்தில் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்தவர் செந்தில். நடிகர் கவுண்டமணி உடன் இவர் நடித்த பல காமெடிகள் இன்றும் ரசிகர்களை சிரிக்க வைத்து கொண்டிருக்கின்றன. தற்போது ஒரு படத்தில் கதையின் நாயகானாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தலுக்கு முன்பாக பா.ஜ., கட்சியில் சேர்ந்த செந்தில், அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் அவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது. இதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மூன்று தினங்களில் அவர் வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.