ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
போராளி, குருவி, பாபநாசம், நவீன சரஸ்வதி சபதம், தர்பார், படங்களில் நடித்தவர் நிவேதா தாமஸ். சமீபத்தில் வெளியான வக்கீல் சாப் தெலுங்கு படத்திலும் நடித்திருந்தார். நிவேதா தாமசுக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று ஏற்பட்டது. தான் தனிமை படுத்திக் கொண்டதாகவும், தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள்பரிசோதித்து கொள்ளுங்கள் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அவர் தியேட்டருக்கு சென்று ரசிகர்களுடன் தான் நடித்திருந்த வக்கீல் சாப் படத்தை பார்த்துள்ளார். தியேட்டரில் தான் படம் பார்க்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டுள்ளார்.
கொரோனா தொற்றுடன் இருந்த நிவேதா தாமஸ் தியேட்டருக்கு சென்றுள்ளார். இது பொறுப்பற்ற செயல் என்றும் சட்டப்படி குற்றம் என்றும் தற்போது புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது. ஆனால் அவருக்கு கொரோனா நெகட்டிவ் என ரிசலட் என வந்ததாகவும், ரசிகர்களுடன் அமர்ந்து பார்க்காமல் தியேட்டரின் கடைசி சுவரின் அருகே நின்று கொண்டே படம் பார்த்தாகவும் நிவேதா தரப்பில் கூறப்பட்டுள்ளது.