மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூலி திரைப்படம் நேற்று வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள இந்த படத்தில் நாகார்ஜுனா, அமீர்கான், உபேந்திரா சவுபின் சாஹிர் போன்ற மற்ற மொழி பிரபலங்கள் தங்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள். அதேசமயம் நம் உள்ளூர் நடிகர்கள் சிலரும் கூலி படத்தின் மூலம் கவனம் பெற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கிறார்கள். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் நடிகர் லொள்ளு சபா மாறன்.
சந்தானம் சின்னத்திரையில் நடித்து வந்த லொள்ளு சபா நிகழ்ச்சியில் அவருடன் இணைந்து பயணித்தவர் காமெடி நடிகர் மாறன். அதன் பிறகு சினிமாவில் இவர் நடித்தாலும் கூட பெரும்பாலும் அது சந்தானத்தின் படங்களாக மட்டுமே இருந்து வந்தது. சமீபகாலமாக தான் ஜே பேபி உள்ளிட்ட சில படங்களில் குணச்சித்திர நடிப்பை இவர் வெளிப்படுத்தி வந்தார். இந்த நிலையில் கூலி படத்தின் துவக்கத்தில் இருந்து கிளைமாக்ஸ் வரை ரஜினியுடன் இணைந்து பயணிக்கும் விதமாக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கதாபாத்திரத்தில் மாறன் நடித்திருந்தது அவரது நடிப்பை ரசிக்கும் பலருக்கும் ஆச்சரியம் தருவதாக இருந்தது.
குறிப்பாக இந்த படத்தில் யோகிபாபு போன்ற ஒரு முன்னணி நகைச்சுவை நடிகருக்கு பதிலாக, ரஜினியின் நண்பர் போல இணைந்து பயணிக்கும் கதாபாத்திரத்தில் மாறன் நடித்துள்ளார். நகைச்சுவை, சென்டிமென்ட் மற்றும் கிளைமாக்ஸில் கொஞ்சம் ஆக்சன் காட்சிகள் என அவர் இந்த படத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்தி இருக்கிறார். இதற்கு பிறகு தமிழ் சினிமாவில் மாறனை நோக்கி பல இயக்குனர்களின் பார்வை திரும்பும் என்றும் நல்ல வாய்ப்புகள் அவரை தேடி வரும் என்றும் எதிர்பார்க்கலாம்.