நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

மலையாள திரையுலக நடிகர் சங்கம் ‛அம்மா' என்கிற பெயரில் செயல்பட்டு வருகிறது. கடந்த வருடம் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கம் காரணமாக அப்போது தலைவராக பொறுப்பு வகித்து வந்த மோகன்லால் தனது பதவியை ராஜினாமா செய்தார். நிர்வாகிகள் பெரும்பாலானோர் அவரைத் தொடர்ந்து மொத்தமாக ராஜினாமா செய்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் சங்கத்திற்கான புதிய தேர்தல் இன்று (ஆகஸ்ட் 15) நடைபெற்று வருகிறது. எர்ணாகுளத்தில் நடைபெற்று வரும் இந்த தேர்தலில் நடிகர் மோகன்லால் கலந்து கொண்டு ஓட்டளித்தார்.
அதன்பிறகு வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உறுப்பினர்களின் கருத்துப்படி புதிய குழு அமைக்கப்படும். அது சரியான பாதையில் நடிகர் சங்க நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்லும். யாரும் இந்த சங்கத்தை விட்டு விலகவில்லை. எல்லோருமே இப்போதும் இதில் ஒரு அங்கமாக தான் இருக்கிறோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு புதிய நிர்வாகத்தை வழங்க முடியும் என நம்புகிறேன்” என்று கூறிய அவர் ஓட்டளித்த பிறகு அங்கிருந்து சென்னை செல்லும் விமானத்தை பிடிப்பதற்காக கிளம்பிச் சென்றார்.