லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
கொரோனாவின் தாக்கம் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் கடந்த வாரம் ஏப்ரல் 10ம் தேதி முதல் தியேட்டர்களில் மீண்டும் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பெரிய படங்களுக்கு 50 சதவீத அனுமதி என்றாலும் பிரச்சினையில்லை, எப்படியும் அந்தப் படங்களைப் பார்க்க மக்கள் வந்துவிடுவார்கள். ஆனால், சிறிய படங்களுக்குத்தான் பிரச்சினையே.
கொரோனா தளர்வுகள் நடைமுறைப்படுத்தப்பட்ட போது கடந்த நவம்பர் 10ம் தேதி 50 சதவீத இருக்கை அனுமதியுடன் தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டபின் பல சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாகின. அவற்றில் பல படங்கள் வெளியான ஓரிரு நாட்களிலேயே தியேட்டர்களை விட்டு தூக்கப்பட்டன. பல படங்களுக்கு சில லட்சம் கூட வசூல் கிடைக்கவில்லை.
அதன்பின் வெளிவந்த படங்களில் 'மாஸ்டர்' படம் மட்டும்தான் அதிக வசூலைப் பெற்று லாபத்தையும் கொடுத்தது. தற்போது வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் 'சுல்தான், கர்ணன்' ஆகிய படங்கள் திருப்தியான வசூலைக் கொடுத்துவிட்டது என்கிறார்கள்.
இந்த மாதமும், அடுத்த மாதமும் சில புதிய படங்கள் வெளியாக உள்ளன. சசிகுமார் நடித்துள்ள 'எம்ஜிஆர் மகன்', சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டாக்டர்', விஜய் சேதுபதி நடித்துள்ள 'துக்ளக் தர்பார், லாபம்' ஆகிய படங்கள் வெளியீட்டு வரிசையில் உள்ளன. 50 சதவீதமே அடுத்த மாதமும் தொடர்ந்தால் இந்தப் படங்கள் வெளிவருமா என்பது சந்தேகம்தான்.
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் ஏப்ரல் 23ம் தேதி வெளியாக வேண்டிய படம். அன்று படத்தை வெளியிடவில்லை என அவர்கள் அறிவித்துவிட்டார்கள். அது போலவே மற்ற படங்களுக்கும் அறிவிப்பு வருமா அல்லது தைரியமாக வெளியிடுவார்களா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.