ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

சமீப காலமாக தெரு நாய்களால் பொதுமக்கள் மிகப்பெரிய அளவில் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். நீதிமன்றத்திலும் ரேபிஸ் வழக்குகள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் உச்சநீதிமன்றம் டில்லியில் தெரு நாய்களை அப்புறப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால் நீதிமன்றத்தின் இந்த உத்தரவானது விலங்குகள் மீது பிரியம் காட்டி வரும் பிரபலங்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
குறிப்பாக நடிகை ஜான்வி கபூர் இதற்கு எதிராக இன்ஸ்டாகிராமில் தனது ஆட்சேபனையை தெரிவித்திருக்கிறார். அதில், நீதிமன்றத்தின் தீர்ப்பை நாய்களுக்கு மரண தண்டனை என்று அவர் கூறியுள்ளார். இது குறித்து கேள்வி எழுப்பும் ஒரு கடிதத்தையும் அவர் பகிர்ந்து உள்ளார். அவரது கடிதத்தை சினிமா பிரபலங்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்களும் ஆதரித்து, இன்று அவை நாய்கள், நாளை யாராக இருக்கும் என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஆனால் பிரபலங்களின் இந்த கருத்துக்கு சாதாரண பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதில், தெரு நாய்களால் பொதுமக்கள் தினமும் எதிர்கொள்ளும் பிரச்னைகளை பிரபலங்கள் அறிய மாட்டார்கள். குறிப்பாக அவர்கள் தெரு வீதிகளில் இறங்கி நடப்பதில்லை. வீட்டிற்குள் இருந்து காரிலேயே வெளியில் புறப்படுகிறார்கள். ஆனால் தெருவில் நடக்கும் சாதாரண மக்களுக்கு தான் இந்த நாய்களால் ஆபத்து ஏற்படுகிறது. இப்படி ஒவ்வொரு நாளும் நாய்களால் பொதுமக்கள் அவதிப்படுவதை ஜான்வி கபூர் போன்ற பிரபலங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் அவருக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.